லப்பர் பந்து படத்தின் `சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல் வெளியானது| The video song ``Chillanjirukkiye'' of the film Lubber Pandhu has been released
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடல் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனா இருவருக்கும் இடையே உள்ள உறவையும் காதலையும் காட்சிப்படுத்தி மிக அழகாக அமைந்துள்ளது. இப்பாடலை பிரட்தீப் குமார் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.